அடக்கடவுளே.. திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரபல நடிகருக்கு ஏற்பட்ட சோகம்.. அப்பளமாக நொறுங்கிய கார்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!famous-actor-accident

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அதிகளவு நடித்து வரும் முன்னணி நடிகர் சர்வானந்த். இவர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்தில் சிக்கியதாக தெரியவருகிறது. 

tamil cinema

இதனை அடுத்து உள்ளூர் மக்கள் அவரை பாதுகாப்பாக அழைத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். சர்வானந்த் பயணித்த கார் ரேஞ்ச் ரோவர் என்பதால் அந்த காரின் பாதுகாப்பு அம்சம் காரணமாக லேசான காயத்துடன் அவர் தப்பியிருக்கிறார்.

அவர் மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நலம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவர் தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் இவருக்கு திருமணம்  நடைபெறும் என்று நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படியொரு சோகம் நிகழ்ந்துள்ளது.