வாவ்! என்னவொரு லுக்! நடிகை எமியின் அழகிய செல்லமகனை பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

வாவ்! என்னவொரு லுக்! நடிகை எமியின் அழகிய செல்லமகனை பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். அவர் தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்திருந்தார். இது தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் கோலாகலமாக  நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதனை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு எமிக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் ஜேக்ஸ் பனாயோது என  பெயரிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து எமி அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் சில புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போதும் அவர் குழந்தையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என் வாழ்கையின் ஒளி நீ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

View this post on Instagram

Light of my life ❤️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo