நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது!! நடிகை எமி ஜாக்ஸன் ஓப்பன் டாக்!

நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது!! நடிகை எமி ஜாக்ஸன் ஓப்பன் டாக்!


emi-jackson-talk-about-her-pregnant


நடிகை எமி ஜாக்ஸன் மதராச பட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். இந்த நிலையில், எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம் அறிவித்தனர். 

இந்தநிலையில் சில நாட்கள் முன்பு எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இது பற்றி பேசியுள்ள எமி ஜாக்சன், உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது. 6 வாரங்கள் கழித்து தான் தெரிந்தது. இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன்.

emi jackson

ஆண்குழந்தை பிறக்குமா பெண்குழந்தை பிறக்குமா என்பது நம் கையில் இல்லை. ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம்.. ஆணோ பெண்ணோ குழந்தை பிறந்ததும் என்னுடன் அவன்/அவள் உலகம் சுற்ற வேண்டியதுதான். என் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். இதனால்  நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.