
Election 2019 actor sivakarthikeyan faced issues to vote
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இன்னும் சில மாதங்களில் Mr . லோக்கல் திரைப்படம் வெளியாக இருக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தல் நாளான நேற்று ஓட்டு போடுவதற்காக தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது மனைவி கிருத்திகாவிற்கு மட்டுமே ஓட்டு போட பெயர் இருந்துள்ளது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை இதனால் அவரால் ஓட்டு போட முடியவில்லை.
அதன்பின்னர் சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு வாக்களிக்க அனுமதி கொடுத்துள்ளனர். சிவகார்திகேயனுக்கு மட்டும் எப்படி இவாறு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி வர, ஏற்கனவே நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயனின் பெயர் இருந்துள்ளதால் சிறப்பு சலுகை மூலம் அவருக்கு வாக்களிக்க அனுமதி கொடுத்துள்ளனர்.
வாக்களித்த பிறகு கையில் மையுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
Voting is your right and fight for your right 💪👍 pic.twitter.com/lYyu2LyWKZ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 18, 2019
Advertisement
Advertisement