சினிமா

சாக்லேட் பாய் துல்கர் சல்மானா இது! லாக்டவுனில் ஆள் அடையாளமே தெரியாம இப்படி ஆகிட்டாரே! வைரலாகும் புகைப்படம்!

Summary:

Dulkar salman latest new picture viral

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, சாக்லேட் பாயாகவும், ரசிகர்களின் கனவு நாயகனாகவும் விளங்குபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் ஆவார்.
இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படமான ஓ காதல் கண்மணி  படத்தின் மூலம் காதல் மன்னனாக வலம் வந்தார். மேலும் மொழி புரியவில்லை என்றாலும், இவர் நடித்த படங்கள் என்றாலே ரசித்து பார்ப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் தற்போது கொரோனோ ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வீட்டில் முடங்கியிருக்கும் நடிகர் துல்கர் சல்மான் முடி வெட்டாமல் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் உள்ளார். இந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அவரது ரசிகர்கள் நடிகர் துல்கர் சல்மானா இது என  பெரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

 

 


Advertisement