
Dual role of vijay in bigil
தெறி, மெர்சலை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீயுடன் கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக நடித்துவரும் படத்தின் டைடில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இந்தப் படத்தின் பெயர் 'பிகில்' என்றும் இந்தப் படத்தின் வெறித்தனமான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு இன்று வெளியிட்டது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு விஜய் இரட்டை வேடத்தில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீயாய் பரவியுள்ளது. பர்ஸ்ட் லுக்கிலே படத்தின் சஸ்பன்ஸை உடைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. இதில் ஒரு விஜய் பயங்கரமான தாதாவாகவும் இன்னொரு விஜய் கால்பந்தாட்ட வீரராகவும் உள்ளார். ஆனால் அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.
Advertisement
Advertisement