பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
அடேங்கப்பா..! 2 வாரத்தில் திரெளபதி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? இயக்குனரே கூறிய தகவல்.!
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில், ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது திரெளபதி திரைப்படம். படத்தின் ட்ரைலர் வெளியாகிய நாளில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியானது.
அணைத்து தரப்பு மக்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த திரைப்படம், வெளியான 2 வாரங்களில் இதுவரை சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள அவர், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியும், 300 திரையரங்குகளில் படம் தொடர்கிறது, இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது எனவும் சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சித் திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.