சினிமா

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் தான்... அடித்து நொறுக்கிய டான் வசூல் !!

Summary:

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் தான்... அடித்து நொறுக்கிய டான் வசூல் !!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.மேலும் டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

இவர் இதற்கு முன்னதாக டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டான் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் டான் திரைப்படம் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் டான் படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போது டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 38 கோடிகள் வரை வசூல் சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரிய ஓப்பனிங் என்றே கூறப்படுகின்றது.

 

 

 

 


Advertisement