நடிகர் விக்ரமின் வைரலாக பரவும் இந்த குறும்படத்தை வெளியிட்டது யார் தெரியுமா?
பிரபல திரைப்பட முன்னணி நடிகர்களில் நடிகர் விக்ரமும் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் உருவான சாமி 2 என்னும் படம் இந்த வாரத்தில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் ஒரு மிக பெரிய வெற்றியை தரும் என்று மிகவும் ஆவலுடன் ஏத்திர்பார்க்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவானா “தேர்ட் ஐ ” என்ற ஒரு விழிப்புணர்வு குறும்படம் சென்னையில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் படமாகும்.
நடிகர் விக்ரமின் இந்த விளம்பர கூறும் படத்தை பிரபல இயக்குனர் ஜேடி-ஜெரி இயக்கியுள்ளார். மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இந்த படத்தின் வெளியீடு விழா நடைபெற்றது. இதனை அடுத்து மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் இந்த படத்தை வெளியிட்டார்.
தற்போது அந்த படம் மிகவும் பிரபலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை பார்த்த நடிகர் விக்ரமின் ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிய்வித்து வருகின்றனர்.