டைட் ட்ரெஸ்ல சில நடிகைங்க கேவலமா இருப்பாங்க., அந்த நடிகை நீச்சல் உடையிலும் அழகா இருப்பாங்க - நயனை வர்ணித்த டிஸ்கோ சாந்தி..!!



Disco santh speech about actress nayanthara dress

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் டிஸ்கோ சாந்தி. இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவரின் உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் பழம்பெரும் நடிகரான ஆனந்தனின் மூத்த மகள் ஆவார். இவரது தங்கை லலிதாகுமாரியும் பிரபல நடிகையாக இருந்தவர். 

டிஸ்கோ சாந்தி கடந்த 1985-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த "வெள்ளை மனசு" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சியாக நடனமாடியும், நடித்தும் மக்கள் மத்தியில் பிரபலமானார். சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

Disco Santhi

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். அத்துடன் சில்க் ஸ்மிதா தயாரித்த சில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கடந்த 1996-ஆம் ஆண்டு ஸ்ரீஹரி என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்ரீஹரி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். 

இந்நிலையில், டிஸ்கோ சாந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து கூறியிருந்தார். அவர் கூறியதாவது, "உடை எந்த வகையிலும் நடிகையை தவறான கண்ணோட்டத்தில் காட்டக்கூடாது. உதாரணத்திற்கு பில்லா படத்தில் நயன்தாரா ஸ்விம்மிங் சூட்டில் வந்திருப்பார். அதில் மிகவும் ரிச் லுக்காகவும், அழகாகவும் இருப்பார்.

Disco Santhi

வக்கிரமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் கூட முகம் சுளிக்கும் அளவிற்கு அவரது கவர்ச்சி இருக்காது. ஆனால் சிலர் உடல் முழுவதும் ஆடைகளை போர்த்திக் கொண்டு வந்தாலும் கூட, இறுக்கமாக கேவலமாக இருக்கும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.