முதலில் மகள் இப்போ மகன்... ஹீரோவாக அவதாரமெடுக்கும் இயக்குனர் ஷங்கரின் மகன்.!



Director Shankar son going to become a hero

திரையுலகில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி பிரபல முன்னணி இயக்குனராக கொடிகட்டி பறப்பவர் ஷங்கர். இவரது பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வசூலை அள்ளியுள்ளது. ஆனால் இறுதியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பெரிய தோல்வி அடைந்தன.  

இந்த நிலையில் அவர் அடுத்ததாக வேள்பாரி நாவலை இயக்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். அவரது மகன் அர்ஜுத் இயக்குனராக ஆசைப்பட்ட நிலையில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் அவர் பணியாற்றுகிறாராம். 

director shankar

இந்த நிலையில் அர்ஜுத் விரைவில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கடந்து வருகிறது. இந்த படத்தை அட்லியின் உதவி இயக்குனராக இருந்தவர்தான் இயக்க உள்ளாராம். மேலும் அப்படத்தை பேசன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இதையும் படிங்க: பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

இதையும் படிங்க: சினிமாவில் நடிக்க, மகள் அதிதிக்கு இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன்.!. ஓப்பனாக உடைத்த நடிகை!!