மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
சினிமாவில் நடிக்க, மகள் அதிதிக்கு இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன்.!. ஓப்பனாக உடைத்த நடிகை!!

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரம்மாண்ட இயக்குனராக கொடிகட்டி பறப்பவர் ஷங்கர். அவரது மகள் அதிதி ஷங்கர். இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் அதிதி படங்களில் சில பாடல்களை பாடி பின்னணி பாடகியாகவும் வலம் வந்தார். அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளியுடன் இணைந்து நடித்த நேசிப்பாயா திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிதி சினிமாவிற்கு வருவதற்கு தனது அப்பா போட்ட கண்டிஷன் குறித்து கூறியுள்ளார். அது வைரலாகியுள்ளது. அவர் கூறியதாவது, மருத்துவருக்கு படித்துக் கொண்டிருந்த நான் படிப்பு முடிந்ததும் நடிப்பேன் என கூறியிருந்தேன். அதற்கு அப்பா ரொம்ப யோசித்து கடைசியாக ஒரு கண்டிஷன் போட்டார். அவர், நான் சினிமாவில் ஜெயிக்கவில்லை என்றால் மீண்டும் மருத்துவ பணிக்கு சென்று விட வேண்டும் என கூறினார். அதற்கு ஒத்துக்கொண்ட பின்னரே நான் சினிமாவில் நடிக்க வந்தேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் குழந்தையாய் மாறிய நடிகர் ரவி மோகன்.! என்னவெல்லாம் செய்துள்ளார் பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் புனித நீராடினேனா?? வைரலாகும் புகைப்படம்.! காட்டமான பிரகாஷ்ராஜ்!!