சினிமா

இரண்டுவேளை உணவிற்கே கஷ்டப்பட்ட பிரபல இயக்குனர்! கேலி செய்த உறவுகள்!

Summary:

Director selvaragavan talks about his early life

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படங்களின் இரண்டாம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த செல்வராகவனின் கடைசி படமான இரண்டாம் உலகம் மாபெரும் தோல்வியை தழுவியது. தற்போது சூர்யா நடிப்பில் NGK என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் செல்வராகவன். மேலும் இயக்குனர் செல்வராகவன் பிரபல இயக்குனர் கஸ்த்தூரி ராஜாவின் மகன் என்பதும், பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் என்பதும் நாம் அறிந்ததுதான்.

இந்நிலையில் தனது தந்தை ஒரு இயக்குனர் என்பதால் நான் வசதியான வாழ்க்கையை வாழ்ந்துவிடவில்லை என்று செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கூறியுள்ள அவர் கொடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால் அரிது.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர்.அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள் என தெரிவித்துள்ளார். 


Advertisement