மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
"விஜய்க்கு சல்யூட் அடிக்கணும்" பிரபல நடிகரின் மனம் திறந்த பேச்சு.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதன்பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இப்படத்தில் படப்பிடிப்பு பணிகள் சென்னை, கேரளா என பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் படப்பிடிப்பு நடத்தப்படவிருந்த நிலையில் நடிகர் விஜய் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. இப்புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இதனையடுத்து விஜய் அரசியலில் கால் பதித்து மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 ஆம் வருடம் சட்ட பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார் என்ற கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று விஜய் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும் அவர் அரசியலில் கால் பதித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
இது போன்ற நிலையில் மக்கள் மற்றும் திரைத்துறையினர் சார்பில் பலரும் விஜய்க்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதில் குறிப்பாக இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி விஜயின் அரசியல் நகர்வு குறித்து பேசி இருக்கிறார். அதாவது, "விஜய் படங்களில் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் அரசியலில் பணம் சம்பாதிப்பதற்காக வரவில்லை, பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தால் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்க மாட்டார். மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் அரசியலில் கால் பதித்திருக்கும் விஜய்க்கு சல்யூட் அடிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.