சினிமா

மாஸ்டர் பட பாலுக்கு செம்ம க்யூட்டாக நடனமாடிய பிரபல இயக்குனரின் மகள்.! வைரலாகும் வீடியோ.

Summary:

Director ranthanakumar daughter danced in vathikamming song

மாநகரம், கைதி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் தான் மாஸ்டர். இப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ஷாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசைத்துள்ளார். இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகயிருந்தது ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக திரைக்கு வராமல் இருந்து வருகிறது. ஆனால் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல இயக்குனர் ரத்ன குமாரின் மகள் ஆடிய க்யூட்டான நடன வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது லைக் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.


Advertisement