கொரோனா பாதிக்கப்பட்ட பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியின் தற்போதைய நிலை என்ன..? சற்றுமுன் வெளியான தகவல்.!Director Rajamouli corona test negative

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் ராஜமவுலி கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. பாகுபலி படத்தை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக இயக்குனர்  ராஜமவுலி தந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "இரண்டுவார தனிமைப்படுத்தலுக்கு பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், தற்போது எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதியாகியிருப்பதாகவும் ராஜமவுலி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்".