திடீர் உடல்நலகுறைவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் பிரபல இயக்குனர்! வருத்தத்தில் ரசிகர்கள்

திடீர் உடல்நலகுறைவு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் பிரபல இயக்குனர்! வருத்தத்தில் ரசிகர்கள்


director-nishikanth-getting-treatment-for-jaundice-in-h

கடந்த 2005ஆம் ஆண்டு மராத்தியில் வெளியான டோம்பிவாலி ஃபாஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நிஷிகாந்த் காமத். மேலும் இப்படத்தை அவர் மாதவன், சங்கீதா, சீமான், தேவதர்ஷினி நடிப்பில் எவனோ ஒருவன் என்ற பெயரில் தமிழிலும்  ரீமேக் செய்துள்ளார். அதனை தொடர்ந்து நிஷிகாந்த் ஜான் ஆபிரகாம் நடித்த காக்க காக்க பட ரீமேக்கான ஃபோர்ஸ், ராக்கி ஹேண்ட்சம்  மற்றும் அஜய்தேவ்கன், தபு, ஸ்ரேயா நடிப்பில் உருவான  த்ரிஷ்யம் போன்ற திரைப்படங்களையும்  இயக்கியுள்ளார்.

 அதனைத் தொடர்ந்து அவர் லாய் பாரி, சாட்ச்யா ஆத் காரத் உள்ளிட்ட சில மராத்தி படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அவரது உடல்நலம்  பாதிக்கப்பட்டு ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

hospital

அங்கு அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் மற்றும் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.