இதைப் பத்தி கொஞ்சம் மறுபடியும் யோசிங்க! நடிகர் சூர்யாவிற்கு வேண்டுகோள் விடுத்த இயக்குனர் ஹரி! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

இதைப் பத்தி கொஞ்சம் மறுபடியும் யோசிங்க! நடிகர் சூர்யாவிற்கு வேண்டுகோள் விடுத்த இயக்குனர் ஹரி! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


Director hari request to surya about release soorarai potru in OTT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் திரையரங்குகள் மூடப்பட்டு படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள சில படங்கள் ஓடிடி  இணையதளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தையும் அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடவுள்ளதாக நடிகர் சூர்யா அறிக்கை விடுத்திருந்தார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

surya

இந்நிலையில் சிங்கம் படத்தை இயக்கிய இயக்குனர் ஹரி சூர்யாவிடம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள்: ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. ஒடிடியில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கைத்தட்டல்களால்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம்.தெய்வம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கிற கோவிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம். தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால், சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்  எனவும் தெரிவித்துள்ளார்.