கொரோனா எதிரொலி: அதிரடியாக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு அதிரடி இயக்குனர் ஹரி!

கொரோனா எதிரொலி: அதிரடியாக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு அதிரடி இயக்குனர் ஹரி!


director hari reduces 25 % salary of aruva movie

கொரோனா பாதிப்பால் திரையுலகம் எதிர்கொள்ளும் இழப்பை சரிசெய்ய தனது அடுத்த படமான அருவா படத்திற்கான சம்பளத்தினை 25% குறைத்துக்கொள்வதாக இயக்குனர் ஹரி அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிரடி திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர்களில் ஒருவர் ஹரி. சாமி, ஆறு, சிங்கம் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பின் அருவா என்ற படத்தினை இயக்க உள்ளார்.

Director hari

இந்த படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பு காரணமாக தடைபட்டுள்ளது. இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அருவா படத்திற்கான தனது சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் "இந்த கரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்குத் திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் “அருவா” திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.