#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
அடுத்த சோகம்! கமல் பட பிரபல இயக்குனர் திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!
அடுத்த சோகம்! கமல் பட பிரபல இயக்குனர் திடீர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

சமீபகாலமாக கொரோனா தொற்று காரணமாகவும், பல உடல்நல பிரச்சினைகள் காரணமாகவும் திரைப் பிரபலங்கள் ஏராளமானோர் அடுத்ததாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தமிழில் கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா மற்றும் மகராசன் போன்ற பல வெற்றிப்படங்களைஇயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன். மேலும் அவர் முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி மகராசன், ராணித்தேனி உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார்.
இவரது மகன் ஜி.என்.ஆர் குமரவேலனும் இயக்குனர் ஆவார். வாஹா, யுவன் யுவதி, ஹரிதாஸ் மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் 90 வயது நிறைந்த இயக்குனர் ஜி.என். ரங்கராஜன் வயதுமூப்பு காரணமாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் ரங்கராஜனின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.