BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
முதல் முறையாக பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றார் இயக்குனர் கவுதம் மேனன்! யார் அந்த நடிகர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர். மேலும் பலவேறு வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குனர் கவுதம் மேனன்.
நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்ட நீண்ட காலமாகியும் இன்னும் வெளிவராத நிலையில் உள்ளது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் கவ்தம் மேனன்.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகன் நடித்துவரும் ஆத்தியா வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு அப்பாவாக இயக்குனர் கவுதம் மேனன் நடிக்க உள்ளாராம். படப்பிடிப்பு பணிகளில் விரைவில் கவுதம் மேனன் இணைய உள்ளார். படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். துருவ் விக்ரமின் நண்பர் வேடத்தில் அன்புதாசன் நடிக்கிறார்.