"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!

"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!


Director barathi raja feel sorry for vijay

தற்போதைய தமிழ் திரைத்துறையில் மாபெரும் வசூல் மன்னனாக முன்னணியில் இருப்பவர் விஜய். இவர் ரசிகர்களால் 'தளபதி' என்று அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "லியோ" திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

vijay

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும்  "தளபதி 68" என்று தற்காலிகமாக பெயரிட்ட படத்தில் வருகிறார் விஜய். மேலும் இப்படத்தில் லைலா, ஸ்னேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இது ஒரு டைம் டிராவல் சம்மந்தப்பட்ட படம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "விஜயின் ஆரம்ப கால திரை வாழ்க்கையில் அவரது அப்பா எஸ். ஏ. சந்திரசேகருடன் வந்து என்னை சந்தித்தார்.

vijay

என் இயக்கத்தில் அவர் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஆனால் சில வருடங்கள் கழித்து விஜயை சந்தித்த போது "உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும். மிஸ் பண்ணி விட்டேன்" என்று கூறினேன். விஜயும் ஆமாம் சார், எனக்கும் அந்த நாள் நினைவில் இருக்கு" என்று வருத்தப்பட்டதாக கூறியுள்ளார்.