சினிமா

என்னாச்சு இயக்குனர் பாலாவுக்கு? சோகத்தில் ரசிகர்கள்! தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Summary:

Director bala through out from arjun reddy tamil remake

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ஒருசில படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறாவிட்டாலும் மக்கள் மத்தியில் பிரபலமானது.

இந்நிலையில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் தயாரானது. இந்த படத்தில் பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது பட தயாரிப்பு நிறுவனம்.

பாலா இயக்கிய அர்ஜுன் ரெட்டி தமிழ் படத்தின் ரீமேக் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் இந்த படத்தை நாங்கள் வெளியிடப்போவதில்லை என்றும் மீண்டும் புது இயக்குனருடன் துருவை வைத்து படத்தை தயார் செய்து வரும் ஜூன் மாதம் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது.

சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பணம் விரயம் ஆனாலும் பரவாயில்லை என இந்த முடிவை எடுத்துள்ளோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இயக்குனர் மற்றும் படக்குழு குறித்த அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement