இது கொஞ்சம் ஓவர்தான்.. 2 நடிகைகளுடன் ஜாலியாக நடிகர் தனுஷ் செய்யும் காரியத்தை பாருங்க..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

இது கொஞ்சம் ஓவர்தான்.. 2 நடிகைகளுடன் ஜாலியாக நடிகர் தனுஷ் செய்யும் காரியத்தை பாருங்க..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!


dhanush photo with priyamani and genelia

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாத்தி படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. இதில் கதாநாயகியாக சமியுக்தா மேனன் நடிக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "நானே வருவேன்" படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திரைக்கு வர தயாராக உள்ளது. 

Actor dhanush

மேலும் நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இந்த நிலையில் மும்பை சென்ற நடிகர் தனுஷை நடிகைகள் ஜெனிலியா மற்றும் பிரியாமணி ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்களுடன் ஜெனிலியாவின் கணவரும், இந்தி நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கும் இருந்தார். இவர்கள் மூவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Actor dhanush

அத்துடன் இதனைக்கண்ட ரசிகர்கள் இது கொஞ்சம் ஓவர்தான். விவாகரத்து முடிஞ்சு கொஞ்ச நாள் ஆகல இவரு என்ன செய்யுறாரு பாருங்க? என்று கூறி வருகின்றனர். ஏனெனில் விவாகரத்து முடிந்த சில நாட்களில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டார். தற்போது நடிகைகளுடன் ஜாலியாக போட்டோ எடுத்து வருகிறார்.