பிரதீப் ரங்கனாதன் பெண்களை அவமானபடுத்துகிறாரா...தனுஷ் பட நடிகரின் சர்ச்சை பேச்சு.!?

பிரதீப் ரங்கனாதன் பெண்களை அவமானபடுத்துகிறாரா...தனுஷ் பட நடிகரின் சர்ச்சை பேச்சு.!?


dhanush-movie-actor-talking-about-pradheep-ranganadhans

பிரதீப் ரங்கநாதனின் முதல் படமான கோமாளியை தொடர்ந்து லவ்  டுடே படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது. பிரதீப் ரங்கநாதன், இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே படத்தின் 100வது நாள் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. 2022ஆம் வருடத்தில் அதிக வசூலை குவித்த படமாக இருக்கிறது. மேலும், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் டப்பிங் செய்து வெளியான பின்பு இப்படத்திற்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய நிலையில், யாரடி நீ மோகினி, அலை பாயுதே ஆகிய படங்களில் நடித்த  நடிகர் கார்த்திக்குமார், இப்படம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் "லவ் டுடே படத்தில் பெண்களை மட்டம் தட்டுவது போல் நடித்து சிரிக்க வைத்துள்ளார். இது சரியானது அல்ல. 10வருடத்திற்கு பின்பு பெண் வெறுப்புணர்ச்சியை தூண்டும் படத்தை எடுத்து விட்டென் என்று வருத்தப்படுவார்" என்று கூறியிருந்தார்.

பிரதீப் ரங்கநாதன்

மேலும் "அடிடா அவள...ஒதடா அவள" பாடலை இயக்கியதற்காக செல்வராகவன் வருத்தப்பட்டார். ஹிப் ஹாப் ஆதி "கிளப்புல மப்புல திரியுற பொம்பள" பாடலை பாடியதற்காக வருத்தபட்டிருக்கிறார் என்பதை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.