தனுஷை வச்சு செய்த ஹாலிவுட்.. ரசிகர்கள் சுற்றிய கம்பெல்லாம் நமத்த பட்டாசான பரிதாபம்..! 

தனுஷை வச்சு செய்த ஹாலிவுட்.. ரசிகர்கள் சுற்றிய கம்பெல்லாம் நமத்த பட்டாசான பரிதாபம்..! 


dhanush hollywood movie

அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கி வந்த netflix திரைப்படம் "தி கிரேட் மேன்". இந்த திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த நிலையில், இந்திய திரையுலகை சார்ந்த நடிகர் தனுஷும் இந்த படத்தில் நடித்திருந்தார். 

இதனால் இந்த படம் இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், தி கிரேட் மேன் படத்தில் தனுஷை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்த படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் வெளியான நிலையில், அதில் தனுஷ் பெரும்பாலான காட்சிகளில் இல்லை. இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், படக்குழுவினர் படத்தின் பிரமோஷனுக்காக தனுசை அதிக அளவு உபயோகம் செய்துவருவதாக தெரியவருகிறது. 

cinema

சமீபத்தில் இந்தியா வந்த இயக்குனர்கள் தனுஷுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். தற்போது படம் வெளியாகிவிட்ட நிலையில், படத்தைப் பார்த்த இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. படத்தில் மொத்தமாக இரண்டு காட்சிகளில் மட்டுமே தனுஷ் நடித்துள்ளார். 

அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதமும் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தாத நிலையில், இந்திய நடிகர் ஒருவரை கட்டாயம் நடிக்க வைக்க வேண்டும் என்பதன் பெயரில் நடிகர் தனுஷ் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.