நீ எப்படி அந்த மாதிரி சொல்லலாம்.. அசல் கோலாரை வெளுத்து வாங்கிய தனலட்சுமி.! ஆடிப்போன பிக்பாஸ் வீடு! வீடியோ...Dhanalakshmi fight with asal kolaar video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது 10 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  

அனைத்து சீசன்களை போலவே இந்த சீசனிலும் நடிகர், நடிகைகள், டான்ஸ் மாஸ்டர், பாடகர்கள், மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த முறை வித்தியாசமாக பொது மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

அவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளவர்கள் ஷிவின் மற்றும் தனலட்சுமி. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பெண்களிடம் சில்மிஷ வேலைகள் செய்து நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருபவர் அசல் கோலார்.  இந்நிலையில் தனலட்சுமி அசல் கோலாரை அண்ணா என அழைத்ததால் அவர் ‘நீ எனக்கு பெரியம்மா மாதிரி இருக்க, உன்னெல்லாம் கதை சொல்லும்போதே பஸ்ஸர் அமுக்கி வெளிய அனுப்பிருக்கனும். ஆண்டி என கூறினாராம்.

உடனே தனலட்சுமி நீ என்னை உருவகேலி செய்கிறாய். நீ யாரு என்னை பார்த்து அப்படி சொல்ல என கூறி இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விட்டால் சண்டை பெரிதாகிவிடும் என அசீம் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.