சினிமாவாகிறது தங்கமங்கை பி.வி. சிந்துவின் வாழ்கை.! சிந்துவாக நடிக்கப்போவது இந்த முன்னணி நடிகையா? குஷியான ரசிகர்கள்!!

deepika padukone goes to act in pv sindhu lifestory


deepika padukone goes to act in pv sindhu lifestory

25-வது  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார். மேலும் இவர்  ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளார்.

இந்நிலையில் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி ஆகிய தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனு சூட் தயாரிப்பில் பி.வி. சிந்துவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகவுள்ளது. மேலும் இப்படத்திற்கு சிந்து என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

pv sindhu

இப்படத்தில் சிந்து கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். பி.வி. சிந்துவின் பயிற்சியாளராக உள்ள முன்னாள் பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் கதாபாத்திரத்தில் சோனு சூட்டே நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிந்துவின் வாழ்க்கை கதையின் திரைக்கதை வசனம் போன்றவை ஏற்கனவே எழுதி தயாராக உள்ளது.  இந்நிலையில் நான் எதிர்பார்த்ததுபோல சிந்து சாம்பியன் பட்டத்தை  பெற்றதால் படத்துக்கு புதிய கிளைமேக்ஸ் கிடைத்துள்ளது. மேலும் நீண்ட காலமாக இந்த கதையோடே வாழ்ந்து வருகிறேன். ஒரு விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பது மிகவும் சவாலான காரியம் என சோனு சூட் கூறியுள்ளார்.