சினிமா

செம்ம அடி.. நடனமாடிக் கொண்டிருந்த போது டிடிக்கு விழுந்த செருப்படி! தீயாய் பரவும் வீடியோ!!

Summary:

தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும்போது தனது குடும்பத்தாரிடம் செருப்பால் அடி

தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும்போது தனது குடும்பத்தாரிடம் செருப்பால் அடி வாங்குவது போன்ற வீடியோவை பகிர்ந்து, பாத்து சிரிச்சிட்டு போங்க.. செம்ம அடி என பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு விழாக்கள் என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

டிடி தொகுப்பாளினியாக மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவுக்காக நடனமாடி கொண்டிருந்த போது யாரோ அவர் மீது செருப்பை எறிந்துள்ளனர். 

அந்த வீடியோவை பகிர்ந்த டிடி, "விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்னு நினைச்சு, ட்ரெண்டிங் ரீல் ஒன்னு ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்ஷன் இதான் அதுக்கு.. பாத்து சிரிச்சிட்டு போங்க.. செம்ம அடி" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement