ஜெயிலர் படம் குறித்து தனுஷ் போட்ட டுவீட்.! விசில் அடித்து கொண்டாடும் ரசிகர்கள்.!danush-tweet-about-jailer-movie

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. சமூக வலைத்தளங்களை திறந்தாலே 'கவாளா" பாட்டு தான் ஹிட். இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், தென் இந்திய சினிமா  படங்களிலேயே கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ஜெய்லர்  திரைப்படம்.


இந்தநிலையில், ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து நடிகர் தனுஷ் டுவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இது ஜெயிலர் வாரம் என குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார் தனுஷ். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டாலும், தனது முன்னாள் மாமனார் ரஜினி மீது அவர் வைத்துள்ள பாசத்தை அந்த பதிவு வெளிப்படுத்துகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.