விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? விரைவில் இரண்டாவது திருமணம்..! நடிகை அமலா பால் கூறிய பதில்.!

விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? விரைவில் இரண்டாவது திருமணம்..! நடிகை அமலா பால் கூறிய பதில்.!



Danush is not the reason for amala paul divorce

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அமலாபால். சிந்துசமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தமிழ் இயக்குனர் AL விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில வருடங்களிலையே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

amala paul

அதன்பிறகு AL விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது மகன் மற்றும் அமலாபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிய தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போது இதற்கு பதிலளித்துள்ள அமலாபால், விவாகரத்து என்னுடைய சொந்த முடிவு. அதற்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை, காரணமும் இல்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், தான் ஒருவரை காதலித்துவருவதாகவும், அவருடன் இரண்டாம் திருமணம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் அமலாபால்.