"என்னை யாரும் இனி அப்படி கூப்பிட வேண்டாம்".. ஹாலிவுட் பட வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் வேண்டுகோள்!Danush asked not to call as south actor

தனுஷ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமானது கடந்த 22ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் தனுஷ் மற்றும் இயக்குனர்களான அந்தோணி, ரூஸோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் தன்னை தென்னிந்திய நடிகர் என அழைப்பதில் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.

danush

மேலும் இதுகுறித்து விளக்கம் அளித்த தனுஷ் தற்போது டிஜிட்டல் உலகத்தில் தெற்கு வடக்கு என தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது குறைந்துள்ளது. அனைவருக்கும் அனைத்து படங்களையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துவிட்டன. இனி தெற்கு வடக்கு என பிரிவதை விட அனைவரும் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரிய தளத்தை உருவாக்குவதே சிறந்தது எனவும் கூறியுள்ளார்.

நல்ல படங்களை எங்கிருந்து வெளியிட்டாலும் அனைத்து விதமான ரசிகர்களும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இப்போது வந்துவிட்டது. எனவே என்னை தென்னிந்திய நடிகர் என அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மாறாக தன்னை இந்திய நடிகர் என அழைப்பதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.