நடிகர் விஜய் குறித்து, பிரபல நடன இயக்குனர் பிருந்தா வெளியிட்ட பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

நடிகர் விஜய் குறித்து, பிரபல நடன இயக்குனர் பிருந்தா வெளியிட்ட பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!


Dance master tweet about vijay

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, தனக்கென  பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரின் படங்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் விஜய் ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கும், பல்வேறு  நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவ்வப்போது பல உதவிகளையும்  செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், கொரோனா பரவல் ஊரடங்கால் படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் ரிலீசுக்காக ரசிகர்கள் பெரும்  எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் மாபெரும் புகழ்மிக்க,  பிரபல நடன இயக்குனர் பிருந்தா, நடிகர் விஜய்யுடன் சர்க்கார் படத்தில் பணியாற்றிய புகைப்படங்களை வெளியிட்டு, அவரைக் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் விஜய்யுடன் மற்ற ஏராளமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் எப்போதும் மிக குறைவாகத்தான் பேசுவார். ஆனால் அவரது வேலை, படங்களில் பெருமளவில் பேசும். மிகுந்த திறமை கொண்ட மற்றும் பணிவான ஒரு நபர் விஜய் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.