என்ன.. டி.ராஜேந்தரா இது! இப்படி ஆள் அடையாளமே தெரியாம ஆகிட்டாரே! சிம்பு வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!d-rajendar-latest-photo-viral

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் டி.ராஜேந்தர். இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். டி. ராஜேந்தர் அவர்கள் கடந்த மாதம் 19ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வயிற்றில் சிறு ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவரது உடல்நலன் கருதி, உயர் சிகிச்சைக்காக டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்ல குடும்பத்தினர்கள் முடிவு செய்தனர்.

D rajendar

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா அழைத்து செல்லப்பட்ட டி.ஆருக்கு சிகிச்சை முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு தனது அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் டி.ராஜேந்தர் உடல் நன்கு இளைத்து, தாடி இல்லாமல் ஆள் அடையாளமே தெரியாமல் காணப்படுகிறார்.