சினிமா

என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்.! மறுமணத்திற்கு பிறகு உருகி டி. இமான் வெளியிட்ட பதிவு!!

Summary:

என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்.! மறுமணத்திற்கு பிறகு உருகி டி. இமான் வெளியிட்ட பதிவு!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி. இமான். இவர் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், திருமணமாகி 13 ஆண்டுகள் ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனைவி மோனிகா ரிச்சர்டை சட்டப்படி விவாகரத்து செய்வதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் டி.இமான் தனது மறுமணம் குறித்த தகவலை நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். அதில் அவர், அமலி உபால்டுடன் மறுமணம் குறித்த செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சி. எனது வாழ்வின் கடினமான தருணங்களில் எனக்கு பெரும் பலமாக இருந்த என் தந்தை கிருபாகர தாஸ் அவர்களுக்கு, எப்போதும் கடன்பட்டுள்ளேன். இந்த திருமணம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம்.

கடந்த சில வருடங்களாக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் இந்த திருமணம் முக்கிய தீர்வாக இருக்கும். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்த, அமலியை எனக்கு அறிமுகம் செய்த எனது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நன்றி. அமலியின் மகள் நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது, அளவில்லாத மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த திருமணத்தில், எனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெஸிக்காவால் கலந்து கொள்ளவில்லை. அவர்களை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர்கள் என்னிடம் விரைவில் வருவதற்காக, பொறுமையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் நான், அமலி, எங்கள் மகள் நேத்ரா, உறவினர்கள் அனைவரும் அன்பை கொடுக்க காத்திருக்கிறோம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    


Advertisement