தனது மனைவியை விவாகரத்து செய்தார் இசை அமைப்பாளர் டி. இமான்.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வருபவர் டி.இமான். ஆரம்பத்தில் சீரியல்களில் பின்னணி இசையமைத்த இவர் பின்னர் திரைப்படங்களில் இசையமைக்க தொடங்கினார். அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
டி. இமான் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இமான் அவரது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.
— D.IMMAN (@immancomposer) December 29, 2021
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு அழைத்து செல்லும். அந்த வகையில் நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி கிடையாது. என் நலன் மீது அக்கறை உள்ளவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னேறி செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.