சினிமா

காதல் திருமணம் செய்து பின்னர் விவாகரத்தில் முடிந்த டாப் நட்சத்திரங்கள் ஒரு பார்வை!

Summary:

Couples who did love marriage and divorced

பொதுவாக நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்வதும், பின்னர் ஏதாவது ஒரு காரணத்திற்கா விவாகரத்து செய்வதும் வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்தில் முடிந்த நடிகர் நடிகைகள் பற்றித்தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

அரவிந்த் சாமி - காயத்ரி:
சுமார் 16 ஆண்டு காலம் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்த இந்த தம்பதிகள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஆதிரா, ருத்ரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

கமல்ஹாசன் - சரிகா:
தமிழ் சினிமாவில் இன்றுவரை முன்னணி நடிகராக இருப்பவர் கமலகாசன். நடிகர் என்பதையும் தாண்டி இன்று முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் கமலஹாசன். நடிகர் கமல்ஹாசனும் சரிதாவும் நீண்ட காலமாக காதலித்துவந்தனர். இவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகுதான் திருமணமே செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கறுத்து வேறுபாட்டால் கடந்த 2012 ஆம் வருடம் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 

பார்த்திபன் - சீதா:
1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள், 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன், ஓர் மகள் இருந்தனர்.

பிரபு தேவா - ராமலதா:
தனது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த 1995ம் ஆண்டு ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா. ஆனால் தனது திருமணம் பற்றி பிரபுதேவா யாரிடமும் பகிரவே இல்லை. மிகவும் ரகசியமாகவே இருந்தது. இவர்களுக்கு மொத்தம் ம் 3 குழந்தைகள். அதில் ஒரு பிள்ளை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது.


இயக்குனர் விஜய் - அமலாபால்:
நட்சத்திர தம்பதிகளான இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சந்தோசமாக போய் கொண்டிருந்த இவர்கள் வாழக்கையில் இவர்க்ளுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணம் முடிந்த மூன்று வருடத்திலேயே விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.


Advertisement