"கூல் சுரேஷ் கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும்" கடுப்பில் வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி..

நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியாகவிருக்கும் "சரக்கு" படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் நடிகர் மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் போன்ற நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். கூல் சுரேஷ் வழக்கமாக திரைப்பட பிரமோஷன்களில் பேட்டி கொடுக்கும் போது எரிச்சலூட்டும் விதமாக எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவார்.
இதன்படி சரக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் தனது செயலால் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இயக்குனர் பாக்கியராஜ், பயில்வான் ரங்கநாதன், ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளினியிடம் செய்த செயல் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
மேடையில் பெண் தொகுப்பாளினியின் கழுத்தில் திடீரென்று மாலையை போட்டுவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத தொகுப்பாளினி ஐஸ்வர்யா, கடுப்பாகி மாலையை கழட்டி வீசிவிட்டார். ஸ்கூல் சுரேஷின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்காக கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டாலும் இவர் தொடர்ந்து இந்த மாதிரி செயல்களையே செய்து வருகிறார் என்று பலர் இவரை திட்டி கமெண்ட் செய்து வந்தனர். இதனையடுத்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூல் சுரேஷ் பல முறை இவ்வாறு செய்துள்ளார். அப்போதே கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க வேண்டும், விட்டு விட்டேன். என்று கோபமாக பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.