வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
வாவ்.. செம கியூட்ல! குக் வித் கோமாளி கனியின் இரு மகள்களை பார்த்திருக்கிறீர்களா! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் கனி. இவர் வித்தியாசமாக, அசத்தலாக சமைத்து நடுவர்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவர் குக் வித் கோமாளி சீசன் 2வின் வெற்றியாளர் ஆனார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவராலும் காரக்குழம்பு கனி என அழைக்கப்படும் இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் ஆவார். மேலும் நடிகைகள் விஜயலக்ஷ்மி மற்றும் நிரஞ்சனாவின் மூத்த சகோதரி ஆவார். கனி ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார்.
அவர் தற்போது யூடியூப் சேனல் தொடங்கி செம ஆக்டிவாக உள்ளார். கனியின் கணவர் இயக்குனர் திரு. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கனி தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.