முத்தமிட்டு நடிகைகளை தொல்லை செய்யும் கமலஹாசன்.! தலைதெறித்து ஓடும் நடிகைகள்.!?

முத்தமிட்டு நடிகைகளை தொல்லை செய்யும் கமலஹாசன்.! தலைதெறித்து ஓடும் நடிகைகள்.!?



Controversy news about kamal hasan

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் உலகநாயகன் கமலஹாசனுடன் இதுவரை ஒரு திரைப்படங்களில் கூட நடிக்கவில்லை. கமலஹாசன் திரைப்படங்கள் என்றாலே முத்த காட்சி கண்டிப்பாக இருக்கும். கமல்ஹாசனுடன் முத்தக் காட்சிகள் நடிக்க முடியாது என்பதே இதற்கு காரணமாக கூறப்பட்டு வருகிறது.

kamal

கனகா - கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனகா. இவர் 90களில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார். ஆனால் கமல்ஹாசனுடன் முத்தக் காட்சிகள் நடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டு வருகிறது.

நதியா - இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமாக இருந்து வந்தார். தமிழில் குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். ஆனால் கமலஹாசனின் ஒரு திரைப்படத்தில் நதியாவை ஒப்பந்தம் செய்த போது அவரின் முத்தக்காட்சிக்கு மறுப்பு தெரிவித்து திரைப்படத்திலிருந்து விலகி விட்டார்.

ரோஜா -  அஜித், விஜய், ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ரோஜா தமிழ், தெலுங்கு என இரு மொழி திரைப்படங்களிலும் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார். ஆனால் கமலுடன் திரைப்படத்தில் முத்தம் காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார் என்று திரை துறையில் பேசி வருகின்றனர்.

kamal

மீனா - குழந்தை நட்சத்திரத்தில் இருந்து தற்போது வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மீனா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். பல ஹீரோக்களுடன் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த மீனா கமலுடன் 'அவ்வை சண்முகி' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது கமலுடன் முத்த காட்சி இருக்கும் என்று பயந்து அப்படத்தின் இயக்குனரிடம் கேட்டாராம். முத்த காட்சி இல்லை என்று தெரிந்த பின்னரே அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்று மீனாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.