வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
நடிகையுடன் அந்த மாதிரி உறவில் இருந்த கமலஹாசன்.! இதனால்தான் கௌதமி பிரிந்தாரா.?
உலக நாயகன் கமலஹாசனின் திரைபயணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் கமலஹாசன். இவர் தமிழில் ஆரம்பகாலகட்டங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் உலகநாயகன் எனும் பெயர் பெற்ற கமலஹாசன், ரசிகர்கள் மனதில் சிறந்த நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளார். அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி உள்ளார் கமலஹாசன்.
சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வந்தன. இதனை அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக விக்ரம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து திரைத்துறை வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வந்தார். இதனையடுத்து தற்போது 'இந்தியன் 2' போன்ற ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிசியான நடிகராக வலம் வருகிறார்.
இதையும் படிங்க: கமலஹாசன் படத்துக்கு நோ சொன்ன சிம்ரன்.! இதுதான் காரணமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!?
கமலஹாசன் கௌதமி பிரிவிற்கு காரணம்
இது போன்ற நிலையில் கமலஹாசன் நடிகை கௌதமியுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்கள் பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவுக்கு காரணம் என்னவென்று இதுவரை பேசப்படாத நிலையில், தற்போது இவர்கள் பிரிந்ததற்கு கமலஹாசன் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் என்ற நடிகையூடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது தான் காரணம் என்று திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது பூஜா குமார் அவரது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். விரைவில் தாயாகப் போகிறார் என்ற செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. புன்னகை மன்னன், குருதிப்புனல், மகாநதி, விஸ்வரூபம், ஹே ராம் போன்ற கமல் நடித்த பல படங்களின் கதாநாயகிகள் கமலஹாசனுடன் இணைத்து பேசப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமலஹாசனின் திரைப்படத்தை பார்த்து பதட்டமடைந்த ரஜினி.? என்ன காரணம் தெரியுமா.!?