கமலஹாசனின் திரைப்படத்தை பார்த்து பதட்டமடைந்த ரஜினி.? என்ன காரணம் தெரியுமா.!?

கமலஹாசனின் திரைப்படத்தை பார்த்து பதட்டமடைந்த ரஜினி.? என்ன காரணம் தெரியுமா.!?Latest news about Rajini and Kamal movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமல்லாது உலகளாவிய சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து 80களின் காலகட்டங்களில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகராகவே இருந்து வருகிறார்.

kamal

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

இதுபோன்ற நிலையில் பஞ்சு அருணாச்சலம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் மனிதன். இப்படம் வெளியான அதே நேரத்தில் கமலஹாசனின் நாயகன் படமும் வெளியானது. எனவே ரஜினிகாந்த் மனிதன் படத்தில் இயக்குனரான பஞ்சு அருணாச்சலத்தை போன் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரிடம் மனிதன் படமும், நாயகன் படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

kamal

நாயகன் படத்தை பார்த்தேன் வேற லெவலில் உள்ளது. நாயகன் போன்ற கமர்சியல் படத்துடன் மனிதன் திரைப்படத்தை வெளியிட்டால் வெற்றி பெறுமா என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பஞ்சு அருணாச்சலம் இரண்டும் ஒரே அளவில் வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் நாயகன் படமும், மனிதன் படமும் ஒரே அளவில் வெற்றி அடைந்தால் இன்னொரு கால்ஷீட் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். கூறியது போலவே இரு படமும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் வெற்றி அடைந்ததால் அடுத்த கால்ஷீட் ரஜினிகாந்த், பஞ்ச அருணாச்சலத்திற்கு கொடுத்துள்ளார்.