சினிமா

சுஷாந்த் தற்கொலையில் திடீர் திருப்பம்! சல்மான் கான் உட்பட 8 பிரபலங்கள் மீது அதிரடி வழக்குப்பதிவு!

Summary:

Complaint on salman khan about sushanth dead

தல தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவர் மனஅழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது. 

 34 வயது நிறைந்த சுஷாந்தின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்த் சிங் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில், தூக்குக்கயிறு  இறுக்கியதால் மூச்சுதிணறிதான் சுஷாந்த் சிங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் ஒன்று செய்துள்ளார். அதில் பிரபல நடிகர் சல்மான்கான், கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பிரபலங்கள் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி வழக்குபதிவு செய்துள்ளார்.

சுஷாந்த் சிங் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதவிர அவரது சில படங்கள் ரிலீசாகவில்லை. இந்நிலையில் அவர்கள் தூண்டி சுஷாந்த்தின் பட வாய்ப்புகளை தடுத்ததால்தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 


Advertisement