வடிவேலுவை படபிடிப்பிலிருந்து துரத்தியடித்த பாரதி ராஜா.. காரணம் தெரிஞ்சா ஷாக்காகீடுவீங்க.!

வடிவேலுவை படபிடிப்பிலிருந்து துரத்தியடித்த பாரதி ராஜா.. காரணம் தெரிஞ்சா ஷாக்காகீடுவீங்க.!


comedy-actor-vadivelu-expulsion-in-shootingspot-by-barathi raja

கோலிவுட் சினிமாவில் முண்ணனி நடிகர்களுக்கு இணையாக பிரபலமான நகைச்சுவை நடிகர் வடிவேலு. ஆரம்பகாலத்தில் நகைச்சுவையில் வல்லவர்களாக இருந்தவர்கள் கவுண்டமணி, செந்தில். இவர்களுக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்பியிருப்பது வடிவேலு தான். மேலும் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு வடிவேலுவின் நகைச்சுவை கதாபாத்திரம் முக்கிய காரணங்களில் ஒன்று.

வடிவேலு

மேலும், சினிமாவில் சில பிரச்சினைகள் காரணமாக நடிப்பதற்கு ப்ரேக் எடுத்துகொண்ட வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு நகைசுவை நடிகரிலிருந்து கதாநாயகனாக எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற இரு படங்களிலும் நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை

இத்தகைய நிலையில், தொலைக்காட்சி பேட்டியில் கலைபுலி எஸ். தானு அவர் தயாரிப்பில் வெளியான 'கிழக்கு சீமையிலே' படத்தை பற்றியும் அப்படத்தில் பாரதிராஜா, வடிவேலுவை துரத்தியடித்ததை பற்றியும் வெளிப்படையாக கூறியிருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

வடிவேலு

அப்பேட்டியில் அவர் கூறியதாவது, " பெரிய பட்ஜெட் படமான கிழக்கு சீமையிலே திரைப்படம் அந்த காலகட்டத்திலேயே எதிர்பார்க்க முடியாத அளவு ஹிட்டாகியது. அந்த படத்தின் படபிடிப்பின் போது பாரதிராஜா வடிவேலுவை படத்தில் நடிப்பதற்கு வர சொல்லிருந்தார் அவரை சந்தித்த வடிவேலு பெரிய பட்ஜெட் படம் என்பதால் சம்பளம் அதிகமாக கேட்டுள்ளார். பாரதி ராஜா நீ நடிக்கவே வேணாம் என்று துரத்தியடித்துள்ளார். இதன்பின் வடிவேலு கேட்ட சம்பளம் குடுத்து சமாதானபடுத்தி அழைத்து வந்தேன் என்று கூறிய வீடியோ வைரலாக பரவியுள்ளது.