கையில் குழந்தையுடன் மேடையேறிய சீயான் விக்ரம்.. திடீரென வெடித்த வெடியால் கொந்தளித்த ரசிகர்கள்..!!

கையில் குழந்தையுடன் மேடையேறிய சீயான் விக்ரம்.. திடீரென வெடித்த வெடியால் கொந்தளித்த ரசிகர்கள்..!!


Cobra Movie Promotion Chiyan Vikram Reaction

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் "கோப்ரா". இப்படத்தின் பிரமோஷன் தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஊர்களுக்கும் பயணித்து வருகின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மியா ஜார்ஜ் நடித்திருக்கும் நிலையில், அண்மையில் நடந்த இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். 

மேலும், அவர் கோப்ரா படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் 2020 ஆம் ஆண்டு தான் சிங்கிளாக இருக்கும்போது இப்படத்தை கமிட் செய்ததாகவும், அதன் பின் இப்படத்தில் நடித்த நேரத்தில் தனக்கு திருமணமானது என்றும், தற்போது 2022 ஆம் ஆண்டு மகனுடன் படத்தின் பிரமோஷனுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

Cobra Movie

இதன்பின் நடிகர் மியாஜார்ஜின் மகனை தூக்கிக்கொண்டு நடிகர் விக்ரம் மேடையில் ஏறும்போது, திடீரென வெடியை வெடித்துள்ளனர். இதனை பார்த்த விக்ரமின் ரசிகர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற விஷயங்களை கவனமாக கையாள வேண்டும் என்று கோபத்துடன் கூறினர். மேடை ஏறிய பின் மியா ஜார்ஜ் மகனை "கோப்ரா பேபி" என்றும் செல்லமாக ரசிகர்கள் அழைத்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.