சினிமா

தமிழ்நாட்டின் 'CM விஜய்'...! ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர்..! அதற்கான விளக்கத்தை பாருங்கள்!

Summary:

CM of tamilnadu vijay fans viral poster

பிகில் படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு ஜோடியாக பேட்ட பட நடிகை மாளவிகா மோகனன் நடிக்க, படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.

விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி அரசியல்வாதியாகவும் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

மேலும், முதல் 24 மணி நேரத்தில் இந்திய அளவில் அதிக #ஹேஷ் டேக்குகளில் டிரெண்டிங் செய்யப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை மாஸ்டர் திரைப்படம் பெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டின் CM விஜய் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஓடியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM of Tamilnadu என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ள விஜய் ரசிகர்கள் CM என்றால் Collection Master என விளக்கமும் கொடுத்துள்ளனர்.
 

 


Advertisement