வாவ்..செம ஹிட்டாகி, டாக்டர் பட செல்லம்மா பாடல் படைத்த மாஸான சாதனை! வாழ்த்துகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

வாவ்..செம ஹிட்டாகி, டாக்டர் பட செல்லம்மா பாடல் படைத்த மாஸான சாதனை! வாழ்த்துகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்!


chellamma-song-got-million-likes-in-youtube

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.   
இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  மேலும் 
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

மேலும் டாக்டர் திரைப்படத்தில் தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை பிரியங்கா தமிழில் அறிமுகமாகிறார். அவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தநிலையில் டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா செல்லம்மா என்ற  பாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. இப்பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். மேலும் இதன் பாடல்வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இந்த பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. தற்போது யூடியூபிலும் பெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது செல்லமா பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் உற்சாகத்துடன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்களும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.