ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது பிரபல காமெடி நடிகருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!


bollywood-comedy-actor-admitted-in-hospital

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. 59 வயது நிறைந்த அவர் நேற்று டெல்லியில் அமைந்துள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார். 

அப்பொழுது அவருக்கு திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

comedy actor

அங்கு அவருக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜு ஸ்ரீவஸ்தவாவிற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் கூறப்படுகிறது.