பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. இறப்பதற்கு முன் வெளியான கடைசி வீடியோ..! கண்ணீரில் ரசிகர்கள்..!!

பிரபல நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்.. இறப்பதற்கு முன் வெளியான கடைசி வீடியோ..! கண்ணீரில் ரசிகர்கள்..!!


bollywood actress sonali death

டிக்டாக் ஊடகத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் சோனாலி போகத். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதன் பின் பாலிவுட்டில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். 

அத்துடன் கலந்த 2020-ல் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் சோனாலி. இந்த நிலையில் கோவா சென்றிருந்த இவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

actress sonali

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சோனாலியின் திடீர் மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக அவர் தனது புகைப்படத்தையும், வீடியோவையும் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 2016-ல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமான சோனாலி போகத், "தி ஸ்டோரி ஆஃப் பத்மாஷ்கர்" என்ற சீரிஸில் ஒரு பகுதியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.