நான் உங்களை நடிகர்னு நெனச்சேன்! ஆனா நீங்க.. பிரபல பாலிவுட் இயக்குனர் எப்படி சொல்லிட்டார்னு பார்த்தீர்களா!!

நான் உங்களை நடிகர்னு நெனச்சேன்! ஆனா நீங்க.. பிரபல பாலிவுட் இயக்குனர் எப்படி சொல்லிட்டார்னு பார்த்தீர்களா!!


bollywood-actor-wish-thanush-and-karnan-movie-team

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் கர்ணன்.  இந்த படத்தில் அவருடன் ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

 மேலும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த 9ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, பெரும் வசூல் சாதனையும் குவித்தது. இந்த நிலையில் அண்மையில் கர்ணன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. 

இந்நிலையில் அதனை கண்ட பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்  தனது ட்விட்டர் பக்கத்தில்,  மிக அற்புதம் மற்றும் புத்திசாலித்தனம். இவ்வாறுதான் கர்ணன் படம் பார்த்த அனுபவத்தை  கூறமுடியும். மாரி செல்வராஜ் எப்படியொரு கதையை கூறியுள்ளீர்கள். உங்களது எண்ணங்களை அருமையாக தீட்டி இருக்கிறீர்கள். தனுஷ் நான் உங்களை ஒரு நடிகர் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் ஒரு மந்திரவாதி என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது